ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் லக்‌ஷயா சென்

Priya
6 Views
1 Min Read

ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்த்து விளையாடினார்.

இதில் லக்‌ஷயா சென் 21-17, 10-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஹூ கே யுவான், லின் சியாங் யி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-12, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரக்‌ஷிதா ராம்ராஜ், தாய்லாந்தின் போர்ன்பாவீ சோசுவோங்குடன் மோதினார். இதில் ரக்‌ஷிதா ராம்ராஜ் 19-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply