மின்வாரிய ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு

Priya
13 Views
1 Min Read

மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியான மின்வாரிய ஊழியர்களுக்கு, 2024-ம் ஆண்டு ஜன.1 முதல் முன்தேதியிட்டு ரூ.25 லட்சம் பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு வழங்கப்படும்.

2024-ம் ஆண்டு ஜன.1 முதல் இதுவரை ஓய்வு பெற்ற அல்லது பணியிடையே மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு, உயர்த்தப்பட்ட பணிக்கொடை வித்தியாசத் தொகை உடனடியாக வழங்கப்படும்.

வருமானவரிச் சட்டத்தின்படி ரூ.20 லட்சம் வரையிலான பணிக்கொடை தொகைக்கு மட்டுமே முழு வரி விலக்கு உண்டு. ரூ.20 லட்சத்துக்கு மேல் வழங்கப்படும் கூடுதல் தொகை, ஊதிய வருமானமாகக் கருதப்பட்டு அதற்குரிய வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மின்வாரிய ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதல்வர் விஜய்க்கு மின்வாரிய வெற்றி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply