காசி தமிழ்ச் சங்கமத்தில் விஜய் பங்கேற்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு

Priya
3 Views
1 Min Read

வாரணாசி​யில் நடை​பெறவுள்ள காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்​கேற்​கு​மாறு தமிழ்​நாடு முதல்வர் விஜய்க்கு, மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் கடந்த நவம்​பர் 2022-ல் காசி தமிழ்ச் சங்​கமம் முதன்​முறை​யாக தொடங்​கப்​பட்​டது. வருடந்​தோறும் நடை​பெறும் இந்த நிகழ்​வில் கலந்​து​கொள்ள அப்​போதைய மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தமிழக முதல்​வ​ராக இருந்த ஸ்டா​லினுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்​தார். முதல் 2 சங்​கமங்​களை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். ஆனால், அதில் ஸ்டா​லின் கலந்துகொள்ளவில்​லை. அடுத்​தடுத்து வந்த இரண்டு சங்கமங்களுக்​கு் அழைப்பு விடுத்​தும் பலன் இல்​லை.

இந்​நிலை​யில், மத்​திய கல்வி அமைச்​சர் பிரஹலாத் ஜோஷி தமிழ்​நாடு முதல்​வர் ஜோசப் விஜய்க்கு கடந்த 11-ம் தேதி கடிதம் எழுதி உள்​ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டுக்கு கிடைத்த அந்​தக் கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அரசு சார்​பில் ‘காசி தமிழ் சங்​கமம் 5-வது பதிப்பு (கேடிஎஸ் 5.0) வாராணசி​யில் 2026 நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 12 வரை நடை​பெறுகிறது. காசி மற்​றும் தமிழ்​நாட்​டுக்கு இடையே நீண்​ட​கால​மாக இருந்து வரும் நாகரி​கத் தொடர்​புகளைக் கொண்​டாடு​வதும், அவற்றை வலுப்​படுத்​து​வதுமே காசி தமிழ் சங்​கமத்​தின் முக்​கிய நோக்​கம்.

இது, இரு பிராந்​தி​யங்​களுக்கு இடையி​லான கலாச்​சா​ரப் பிணைப்பை ஆழப்​படுத்​துகிறது. இளைஞர்​கள் தங்​கள் பொதுவான பாரம்​பரி​யத்தை அனுபவிக்க வழி​வகை செய்​வது, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் உணர்வை மேம்​படுத்​து​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது. இத்திட்​டம் குறித்த கூடு​தல் விவரங்​களை https://kashitamil.iitm.ac.in/ என்ற அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் காணலாம். வரும் நவம்​பர் 28-ம் தேதி நடை​பெறவுள்ள கேடிஎஸ் 5.0 தொடக்க விழா​வில் கலந்​து​கொண்டு சிறப்​பிக்​கு​மாறு உங்​களை அன்​புடன் அழைக்​கிறேன். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply