ஆண்டுதோறும் 400 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த காலங்களைப் போல் இல்லாமல், தற்போது விளையாட்டு சங்கங்களும், அரசும் இணைந்து செயல்படுகின்றன.
தேசிய, சர்வதேச அளவில் விளையாடிய வீரர்களுககு இனிமேல் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக, நவ.19-ம் தேதி 1,100 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
2005-26 காலகட்டத்தில் 305 வீரர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ள நிலையில், இனி ஆண்டுக்கு 300 முதல் 400 வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விளையாட்டுத் துறையில் போக்சோ வழக்குகள் அதிகரிக்க, போலி பயிற்சியாளர்களே காரணம். இத்தகைய பிரச்சினைகளை தடுக்க, பயிற்சியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
மகளிருக்கென தனியாக முதல்வர் கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதால், கல்லூரிகளிலும் உடற்பயிற்சி வகுப்புகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

