வீட்டுவசதி, நகர்ப்புற வாரியம் சார்பில் ரூ.1021 கோடியில் 768 குடியிருப்புகளை முதல்வர் திறந்தார்

Priya
752 Views
2 Min Read

வீட்டு வசதி வாரி​யம், நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில், ரூ.1,021.53 கோடி​யில் 768 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள், வணிக வளாகங்​களை முதல்​வர் விஜய் காணொலி வழி​யாகத் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் சார்​பில் சென்னை அரும்​பாக்​கத்தில் ரூ.588.10 கோடி​யில் 304 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் மற்​றும் 11 தளங்​கள் கொண்ட வணிக வளாகம் கட்​டப்​பட்​டுள்​ளன.

அசோக் நகரில் ரூ.307.89 கோடி​யில் வணிக வளாகம் மற்​றும் உயர்வரு​வாய்ப் பிரி​வினருக்​கான 216 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள், பெசன்ட் நகரில் ரூ.23.79 கோடி​யில் வணிக வளாகம் மற்​றும் 8 உயர் வரு​வாய் பிரிவு குடி​யிருப்​பு​கள் மற்​றும் 8 மத்​தியவரு​வாய் பிரிவு குடி​யிருப்​பு​கள், பாடிக்​குப்​பத்​தில் ரூ.80.24 கோடி​யில் உயர் வரு​வாய் பிரி​வினருக்​கான 80 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

கரு​மாங்​குளத்​தில் ரூ.3.95 கோடியில் பொருளா​தா​ரத்​தில் நலிவுற்ற பிரி​வினருக்​கான 24 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் என 5 இடங்​களில் ரூ.1,003.97 கோடி​யில் கட்​டப்​பட்ட 643 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​கள் மற்​றும் வணிக வளாகங்​களை முதல்​வர் விஜய் நேற்று காணொலி வழி​யாகத் திறந்​தார்.

நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில் அனை​வருக்​கும் வீட்டு வசதித் திட்​டத்​தின்​கீழ், கரூர் மாவட்​டம் கொளந்தா கவுண்​டனூர் திட்​டப் பகு​தி​யில் மறுகட்​டு​மானத் திட்​டத்​தின்கீழ், ரூ.17.56 கோடி​யில் கட்​டப்​பட்ட 125 அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களை​யும் முதல்​வர் திறந்​தார்.

ரூ.71.36 கோடியில் கட்டிடங்கள் காவல் துறை சார்பில் ரூ.8.90 கோடியில் ஈரோடு, ராமநாதபுரம், சென்னை, திருவாரூரில் 4 காவல் நிலையங்கள், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் எஸ்பிசிஐடி அலுவலக கட்டிடம், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.8.41 கோடியில், சென்னை -மேடவாக்கம், திருவாரூர்- நீடாமங்கலம், வேலூர்- ஒடுக்கத்தூரில் தீயணைப்பு நிலையங்கள் என ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதி – II ல் ரூ.15.23 கோடியில் 17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் நாயனூரில் ரூ.5.57 கோடியில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிக இயக்குநரகம் சார்பில் திருப்பூர்

மாவட்டம் முதலிபாளையத்தில் ரூ.13.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்துக்கான பொது வசதி மையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் அமைச்​சர்கள் ராஜ்கு​மார், மதன்ராஜா, நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யத் தலை​வர் கு.ப.கிருஷ்ணன், வீட்டுவசதி வாரி​யத் தலை​வர் சி​வா, தலை​மைச் செயலர் சாய்​ கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், துறைச் செயலர்கள் கார்த்திக் (உள்துறை), கிர்​லோஷ் குமார் (வீட்டு வசதி), பிரதீப் யாதவ் (எம்எஸ்எம்இ), லில்லி (கைத்தறி), வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிர​பாகர், நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய மேலாண்மை இயக்​குநர்​ பெ.ரமண சரஸ்​வ​தி உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply