முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை: நவ.7 வரை விநியோகம்

Priya
681 Views
1 Min Read

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான இலவச வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளில் நவ.7-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை அவசியம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நவ.7-க்குள் தங்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் செல்ல வேண்டும்.

இத்திட்டம் எவ்வித தாமதமுமின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, கடைகளுக்கான அனுப்பீடு மற்றும் விநியோகப் பணிகளை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply