தமிழகம் – காசி இடையே பல நூற்றாண்டு கலாச்சார தொடர்பு: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பெருமிதம்

Priya
700 Views
2 Min Read

தமி​ழ​கத்​துக்​கும், காசிக்​கும் இடையே பல நூற்​றாண்​டு​களாக கலாச்​சார தொடர்​பு​கள் இருந்து வரு​வ​தாக ‘காசி தமிழ்ச் சங்​கமம்​-5-0′ அறி​முக விழா​வில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் பெரு​மிதத்​துடன் கூறி​னார்.

தமி​ழ​கத்​துக்​கும், வட இந்​தி​யா​வில் உள்ள காசிக்​கும் இடையி​லான பண்​பாட்டு தொடர்​பு​களை பலப்​படுத்​தும் வகை​யில் சென்னை ஐஐடி சார்​பில் ‘காசி தமிழ்ச் சங்​கமம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

மத்​திய கல்வி அமைச்​சகத்​துடன் இணைந்து நடத்​தப்​படும் இந்​நிகழ்ச்​சி, காசி தமிழ்ச் சங்​கமம் 5.0 என்ற பெயரில் இந்த ஆண்டு 5-வது ஆண்​டாக நவ. 28 முதல் முதல் டிச. 12 வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான முன்​னோட்ட நிகழ்ச்சி சென்னை ஐஐடி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் பேசி​ய​தாவது: தேச ஒரு​மைப்​பாட்டை மேம்​படுத்​தக்​கூடிய செயல்​களை​ பிரதமர் மோடி செய்து வரு​கி​றார். அந்த வகை​யில்​தான் காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்​திய மக்​கள் அனை​வ​ரும் கலாச்​சா​ரம், பாரம்​பரி​யம், வரலாறு, புவி​யியல் ரீதி​யாக ஒரு​வ​ருக்​ கொரு​வர் தொடர்​புடைய​வர்​கள். காசி – தமிழகம் இடையே கலாச்​சார ரீதி​யாக​வும், ஆன்​மிக ரீதி​யாக​வும் தொன்றுதொட்டு பல நூற்​றாண்​டு​களாக தொடர்பு இருந்து வரு​கிறது.

அந்த தொடர்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது. தமி​ழ​கம் காசி​யுடன் மட்​டுமல்ல; சவு​ராஷ்டிரம், மகா​ராஷ்டிரம், ஒடிஷாவுட​னும் நீண்ட கால​மாக கலாச்​சார தொடர்​பு​களை வைத்​துள்​ளது.

இந்த கலாச்​சார தொடர்​பு​கள் மேலும் வலுப்​படுத்​தப்பட வேண்​டியது அவசி​யம் இவ்வாறு ஆளுநர் பேசினார். ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி பேசும்​போது, ‘‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்​னும் பிரதமர் மோடி​யின் தொலை நோக்கு திட்​டத்​தின் கீழ் காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி 2022 முதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்டு நிகழ்​வின் கருப்​பொருள் ‘திருக்​குறள் பயில்​வோம்’ என்​ப​தாகும்.

நவ.28 முதல் டிச.12 வரை நடை​பெறும் இந்​நிகழ்ச்​சி​யில், மாண​வர்​கள், ஆசிரியர்​கள், கலைஞர்​கள், தொழில்​முனை​வோர், எழுத்​தாளர்​கள், ஆன்​மிகபிர​முகர்​கள் என பல்​வேறு தரப்​பில் இருந்​தும் 1500 பேர் காசிக்கு அழைத்​துச் செல்​லப்பட உள்​ளனர்.

மேலும், நாடு முழு​வதும் 1000 கல்​லூரி மாண​வர்​கள் தேர்​வு செய்​யப்​பட்டு திருக்​குறள் தொடர்​பான ஆய்​வுக்​கட்​டுரை உரு​வாக்க அவர்​களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பெல்​லோஷிப் வழங்க முடிவுசெய்​துள்​ளோம்’’ என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் ஐஆர்​சிடிசி குழு பொது மேலா​ளர் பி.​ராஜலிங்​கம் பாசு, மத்​திய செம்​மொழி தமிழ் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் இயக்​குநர் ஆர்​.சந்​திரசேகரன், தொழில​திபர் நல்​லி குப்​பு​சாமி உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​

நவ.13 வரை முன்பதிவு செய்யலாம்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு (www.kashitamil.iitm.ac.in) அக்.15-ம் தேதி தொடங்கியது. நவ.13-ம் தேதி கடைசிநாள்.

திருக்குறள் மற்றும் காசி தொடர் பான தேர்வு, தொலைபேசி நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவர்கள், காசி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்கள், பண்பாட்டு மையங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களைப் பார்வையிடுவார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply