தவெக அரசின் ரெய்டுகளை கண்டு கடைக்கோடி தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது: திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசம்

Priya
710 Views
1 Min Read

திமுக முன்​னாள் அமைச்​சர்​களை மட்​டுமே குறிவைத்து நடத்​தப்​படும் ரெய்​டுகளை கண்டு திமுக​வின் கடைக்​கோடிக் தொண்​டரின் கால் நகம்​கூட அஞ்​சாது என்று ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறியுள்​ள​தாவது: பெண்​கள், குழந்​தைகள், முதி​யோர் என யாருமே பாது​காப்​பாக இல்​லாத மாநில மாகத் தமிழகத்தை மாற்​றி​விட்ட முதல்​வர், மக்​களின் கவனத்​ தையும், ஊடகங்களின் பிரேக்​கிங் நியூஸ்-ஐயும் திசைதிருப்ப ரோடுஷோ நடத்​தலாமா, ரெய்டு ஷோ நடத்​தலாமா என்று சிந்​தித்​துக் கொண்​டிருக்​கிறார்.

திமுக முன்​னாள் அமைச்​சர்​களை மட்​டும் குறிவைத்து நடத்​திக் கொண்​டிருக்​கும் ‘Vettri Vendetta Politics’ திட்​டம் வழக்​கம்​போல சட்​டத்​தின் முன் தோற்று, மக்​கள் முன் தலைகுனிந்து நிற்​கும்.

திருச்சி கிழக்கு இடைத்​தேர்​தலுக்​கான ரீல்ஸ் வீடியோக்​களைத் தயாரிக்​க நடத்​தப்​படும் இந்த ரெய்​டுகளை கண்டு திமுக​வின் கடைக்​கோடிக் தொண்​டரின் கால் நகம்​கூட அஞ்​சாது.

சட்​டம் – ஒழுங்கு சீர்​கேடு, துருப்​பி​டித்​து​விட்ட நிர்​வாகம், வாட்டி வதைக்​கும் விலை​வாசி உயர்வு என மக்​களை பாதித்​துக் கொண்​டிருக்​கும் இந்த தவெக ஆட்​சி​யைக் கண்டு, தமிழகம் மட்​டுமல்ல இந்​திய நாடே எள்ளி நகைக்​கிறது.

இதை எல்​லாம் மறைக்க, திமுக​வினருக்கு வாய்ப்​பூட்டு போட லாம் என்று நினைக்​கிறீர்​கள். இனி இன்​னும் இன்​னும் வேக​மாக தவெக அரசின் வண்​ட​வாளங்​களை தண்​ட​வாளம் ஏற்​று​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply