மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 குடும்பங்களுக்கு நிவாரண மளிகை பொருட்களை  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார். 

சென்னை அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4ம் தேதி முதல் இதுவரை 60,000 மக்களுக்கு உணவு, பால் மற்றும் 2000 லிட்டர் தண்ணீர் விநியோகம் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. M.K. மோகன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று 80,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.WhatsApp Image 2023 12 14 at 6.50.38 PM 1

இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி து.செயலாளர் கார்த்திக் மோகன் தகவல் தெரிவிக்கையில், மக்கள் நலன் கருதி தூய்மை பணிக்காக தனது சொந்த நிதியில் இருந்து 30 லாரிகள் மற்றும் 20 சுத்திகரிப்பு இயந்திரம் கொண்டு தொடர்ந்து 5 நாட்கள் தொகுதிக்குட்பட்ட 14 வட்டங்களில் மழை வெள்ளத்தால் தேங்கி கிடந்த கழிவுகளை அகற்றினோம். இதை தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட 80,000 குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து 54 பெரிய ரக லாரிகளில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிவாரண பொருட்கள், பின்னர் சென்னை மாநகருக்குள் பல நூறு சிறிய ரக லோடு ஆட்டோக்களில் கொண்டு வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. 5 நாட்களில்  இந்த 80,000 குடும்பங்களுக்கு சென்றடையும் வகையில் திட்டமிடபட்டுள்ளது. என்று கூறினார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here