நடிகர் பரத் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் எம்.குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகும் இதில் மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிவேஷ்தா ராஜ், மீனாட்சி தினேஷ், ரக் ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ட்வின் டவர் புரொடக் ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆலப்புழா பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

