“பாஜக மாநிலத் தலைவர் பதவி; மேலிடம் அழைத்தால் முடிவை அறிவிப்பேன்” – நடிகர் சரத்குமார் கருத்து

Priya
774 Views
1 Min Read

‘பாஜக மேலிடம் அழைத்து மாநில தலை​வர் பொறுப்​பேற்​குமாறு தெரி​வித்​தால் எனது முடிவை அறி​விப்​பேன்’ என்று நடிகரும், பாஜக நிர்​வாகி​யுமான சரத்​குமார் தெரி​வித்​தார்.

இது​தொடர்​பாக, சென்னை விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பாஜக தலை​வ​ராக நான் பத​வி​யேற்​கப் போவ​தாக வெளியாகும் செய்​தி​களைப் பத்​தி​ரி​கைகள் வாயி​லாகத்​தான் தெரிந்​து​கொள்​கிறேன்.

பாஜக மேலிடம் என்னை அழைத்து, மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்​குமாறு தெரி​வித்​தால், அப்​போது என்னுடைய முடிவைத் தெரி​விப்பேன்.

நான் பாஜக மாநிலத் தலை​வ​ராகவோ அல்​லது மத்​திய அமைச்​சராகவோ இருந்​தால், தவெக ஆட்​சி​யைப் பற்றி கருத்து தெரி​விக்​கலாம். தற்​போது எந்​தப் பொறுப்​பிலும் இல்​லாததால், தவெக ஆட்சி குறித்து என்​னால் கருத்​துக்​கூற இய​லாது.

‘வீ த லீடர்ஸ்’ இயக்​கம் அரசி​யல் கட்​சி​யாக உரு​வாவதற்கு முன்​னோட்​ட​மாக உள்​ளாட்​சித் தேர்​தலில் அண்​ணா​மலை களமிறங்​கு​கிறார். ஜனநாயகத்​தில் யார் வேண்​டு​மானாலும் அரசி​யல் கட்​சி​யைத் தொடங்​கலாம்.

தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்​கை பொருத்​தவரை, எங்​கும் பெரிய அளவி​லான கல​வரங்​கள் ஏற்​பட​வில்லை. ஆங்​காங்கே நடை​பெறும் கொலை, கொள்​ளைச் சம்​பவங்​களுக்கு தமிழக அரசுதான் காரணம் என்​றும் கூறி​விட முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply