பாரா ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸில் வெண்கலம்: ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்வர் வாழ்த்து

Priya
789 Views
1 Min Read

பாரா ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அரசு சார்பில் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது. வீரர் ஜெஹான் டொரப் மதன் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply