சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

Priya
794 Views
3 Min Read

தமிழகத்தில் சென்னை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை (அக்.18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.18) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

19-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

22-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

23-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை, பெரம்பலூர், லப்பைக்குடிகாடு பகுதிகளில் தலா 12 செமீ, விழுப்புரம் மாவட்டம் முகையூர், சித்தலிங்கமடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி, திருச்சி மாவட்டம் ஏலூர்பட்டியில் தலா 11 செமீ, புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் பொன்பரப்பி ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply