மேற்கு வங்கத்திலும் தவெக கிளை தொடக்கம்: சமூக பணிகள் மூலம் பொதுமக்களைக் கவர வியூகம்

Priya
874 Views
1 Min Read

தமிழ்​நாட்​டின் ஆளும் கட்​சி​யான தமிழக வெற்​றிக் கழகத்​தின் (தவெக) கிளை மேற்கு வங்க மாநிலத்​தி​லும் தொடங்கப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்க மாநிலத்​தில் கிழக்கு பர்த்​வான் மாவட்​டம் பகுபூர் பகு​தி​யில் தமிழக முதல்​வர் விஜய்​யின் தவெக கட்​சி​யின் புதிய கிளை அலு​வல​கம் நேற்று முன்​தினம் திறக்​கப்​பட்​டது.

இந்​நிகழ்​வில் அம்​மாநில ஒருங்​கிணைப்​பாளர் சைத்​தாலி ராய், இணை ஒருங்​கிணைப்​பாளர் சஞ்​சய்​.டி மற்​றும் பல்​வேறு மாவட்ட தவெக உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர். தமிழகத்​திலிருந்து வந்த தவெக நிர்​வாகி​யான ராஜாங்​கம் என்​பவர் தவெக கிளை அலுவலகத்தை ரிப்​பன் வெட்டி திறந்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் தவெக​வின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் சைத்​தாலி ராய் பேசும்​போது, “தவெக​வின் இந்த அலு​வல​கத்​தின் மூலம் மேற்குவங்க மாநிலத்​தில் அமைப்பு ரீதி​யான செயல்​பாடு​கள் தொடங்​கி​யுள்​ளது. தற்​போதைக்கு நேரடி அரசி​யல் திட்​டங்​களுக்​குப் பதிலாக சமூக செயல்​பாடு​கள் மூலம் சாமானிய மக்​களைச் சென்​றடைவதே எங்​களின் முக்​கிய நோக்​கம்.

இதற்​கான அறி​வுறுத்​தல், தமிழ்​நாட்​டின் தவெக தலை​மை​யிட​மிருந்து எங்​களுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது்” என்​றார். கிழக்கு பர்த்​வானை அடுத்து பங்​கு​ரா, பிர்​பும் மற்​றும் புருலி​யா​விலும் விரை​வில் தவெக கட்சி அலு​வல​கங்​கள் தொடங்​கப்பட இருப்​ப​தாக அதன்​ நிர்​வாகி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply