வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

Priya
864 Views
2 Min Read

வாரத்​தில் 5 நாட்​கள் மட்​டும் வேலை என்ற கோரிக்​கையை ஆராய உயர்​மட்​டக் குழு உடனடி​யாக அமைக்​கப்​படும் என்று வங்கி ஊழியர்​களின் கூட்​டமைப்​பு, இந்​திய வங்​கி​கள் சங்​கத்​தின் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, வங்கி ஊழியர்​களின் வேலை நிறுத்​தம் தள்ளி வைக்​கப்​பட்​டது. மற்ற கோரிக்​கைகள் குறித்து விவா​திக்​கத் தனி​யாகப் பேச்​சு​வார்த்​தைகள் விரை​வில் தொடங்​க​வுள்​ளன.

வாரத்​தில் 5 நாட்​களுக்கு வேலை திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அனைத்து ஊழியர்​களுக்​கும் விகி​தாச்​சார அடிப்​படையில் பிஎல்ஐ (லாபத்​தின் அடிப்படை​யில் இணைப்பு ஊக்​கத்​தொகை) சமமாக வழங்​கு​வது உள்​ளிட்ட பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, வங்கி ஊழியர்​களின் கூட்​டமைப்​பும், அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​க​மும் நாடு​தழு​விய அளவில் செப்​.28-ம் தேதி முதல் செப்​.30-ம் தேதி வரை வேலைநிறுத்​தத்​தில் ஈடுபட இருப்​ப​தாக அறி​வித்​திருந்​தனர்.

இதற்​கிடை​யில், புதுடெல்​லி​யில் வங்கி ஊழியர்​களின் கூட்​டமைப்பு மற்​றும் இந்​திய வங்​கி​கள் சங்​கம் இடையே நேற்று முன்​தினம் இரவு பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதன் முடி​வில், வாரத்​தில் 5 நாட்​கள் வேலை என்ற கோரிக்​கையை ஆராய்​வதற்​காக, இந்​திய வங்​கி​கள் சங்​கம், வங்கி ஊழியர்​களின் கூட்​டமைப்பு உள்​ளடக்​கிய ஒரு உயர்​மட்​டக் குழு உடனடி​யாக அமைக்​கப்​படும். இக்​குழு சாத்​தி​ய​மான அனைத்து மாற்று வழிகளை​யும் ஆராய்ந்​து, ஏற்​றுக்​கொள்​ளக்​கூடிய ஒரு தீர்வை உரு​வாக்​கும்.

பிஎல்ஐ திட்​டத்​தில் மாற்​றங்​களைப் பரிந்​துரைப்​பது குறித்து இந்​திய வங்​கி​கள் சங்​கத்​துடன் பேச்​சு​வார்த்​தைகளை தொடங்​கலாம்.

இதர கோரிக்​கைகள் தொடர்​பாக விரை​வான தீர்வை எட்​டு​வதற்​காக, இரு தரப்​பினருக்​கும் இடையே விவா​திக்​கப்​படும் என்று பேச்​சு​வார்த்​தை​யில் முடிவு செய்​யப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, வேலை நிறுத்​தம் தள்ளி வைக்​கப்​பட்​டது.

இது குறித்​து, அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்க செய​லா​ளர் எஸ்.நாக​ராஜன் கூறிய​தாவது: ஐடிபிஐ வங்​கியை வெளி​நாட்டு மயமாக்​கு​வதை நிறுத்​து​வது மற்​றும் வாரத்​தில் 5 நாட்​கள் வங்கி வேலை நாட்​கள் போன்ற முக்​கிய பிரச்​னை​களுக்கு தீர்வு காணக் கோரி, எங்​களது சங்​கம் செப்​.25-ம் தேதி பிரதமரிடம் முறை​யிட்​டது.

இப்​பிரச்​னை​களுக்கு ஒரு நடை​முறை சாத்​தி​ய​மான தீர்வை எட்ட, வங்கி நிர்​வாகம் மற்​றும் தொழிற்​சங்க பிர​தி​நி​தி​களை உள்​ளடக்​கிய ஒரு உயர்​மட்​டக் குழுவை (High-Power Committee) அமைக்க நாங்​கள் பரிந்​துரைத்​துள்​ளோம்.

இதைத்​தொடர்ந்​து, சில முக்​கிய முன்​னேற்​றங்​களின் பின்​னணி​யில், தீர்க்​கப்​ப​டாத கோரிக்​கைகள் குறித்து விவா​தித்​து, விரை​வான தீர்வு காண உறு​தி​யளிக்​கப்​பட்​டுள்​ளது. அடுத்​தகட்ட விபரங்​கள் பின்​னர் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், வங்​கி​கள் நேற்று வழக்​கம்​போல செயல்​பட்​ட​தால், வாடிக்​கை​யாளர்​கள் பணம் எடுத்​தல், பணம் வைப்​பு, காசோலை பரிவர்த்​தனை, கடன்​ வசதி உள்​பட பல்​வேறு வங்​கி சேவைகளை பெற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply