தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57 சதவீதம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இ-கேஒய்சி பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் (இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் நீங்கலாக) 26-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

