“கனிம வளத்தைச் சுரண்டி அபராதம் கட்டுவதுதான் தவெகவின் தூய ஆட்சியா?” – வானதி சீனிவாசன்

Priya
700 Views
1 Min Read

“சட்ட விரோதமாக கனிம வளங்களைச் சுரண்டி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கோடிக்கணக்கில் அபராதம் எதிர்கொள்ளும் தவெக நிர்வாகிகளுக்கு நீங்கள் சொன்ன அந்த தூய ஆட்சிக் கொள்கை பொருந்தாதா?” என முதல்வர் விஜய்க்கு பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கருவேலம்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய குவாரி நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் தவெக நிர்வாகிகள் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தூய சக்தியின் ஆட்சி என்று கூறிக் கொள்ளும் தவெக நிர்வாகிகளின் நிஜ முகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

என் கட்சியினராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விடமாட்டேன் என்று சட்டப்பேரவையில் வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், சட்ட விரோதமாக கனிம வளங்களைச் சுரண்டி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கோடிக்கணக்கில் அபராதம் எதிர்கொள்ளும் உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு நீங்கள் சொன்ன அந்த தூய ஆட்சிக் கொள்கை பொருந்தாதா?

இந்த விவகாரத்தில் சட்டவிரோத கனிமவளச் சுரண்டலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply