‘டோரதி’ உலகளவில் பேசப்படும் படம்: கீர்த்தி சுரேஷ் உறுதி

Priya
702 Views
1 Min Read

கார்த்​திக் சுப்​பு​ராஜ் இயக்​கத்​தில் கீர்த்தி சுரேஷ் நடித்​துள்ள படமான ‘டோர​தி’ நாளை (செப்​.25) வெளி​யாகிறது. இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

இதில் கீர்த்தி சுரேஷ் கூறும்​போது, “இந்​தப் படத்​தின் கதையைப் படித்​ததும் உடனே ஒப்​புக்​கொண்​டேன். இது போன்ற படத்​தில் நடிப்​பது பெரு​மை. இயக்​குநர் கார்த்​திக் சுப்​பு​ராஜிடம் இருந்து நிறைய விஷ​யங்​கள் கற்​றுக் கொண்​டேன். இளை​ய​ராஜா சார் இசை​யில் நடிப்​பேன் என்று கனவிலும் கூட நினைக்​க​வில்​லை. ரிஷி​காந்த், சனந்த் ஆகியோ​ருடன் நல்ல நட்பு உரு​வாகி இருக்​கிறது. உலகள​வில் பேசப்​படும் படமாக இருக்​கும் என நம்​பு​கிறேன்” என்​றார்.

கார்த்தி சுப்​பு​ராஜ் பேசும்​போது, “நான் இயக்​கிய ‘இறை​வி’யை விட உணர்​வுபூர்​வ​மான கதை ‘டோர​தி’. இந்த படம் தொடங்​கிய​தில் இருந்து ஒரு மேஜிக் போல உள்​ளது. பார்த்த எல்​லோரும் பாராட்டி வரு​கின்​றனர். இளை​ய​ராஜா இசை கேட்டு வளர்ந்​தவர்​கள் நாங்​கள். இந்​தப் படத்​துக்கு பெரிய ஆசீர்​வாதம் அவர் இசை​தான்​” என்​றார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply