எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்புக்கு மட்டும் குறைந்த கட்டணத்​தில் திட்டம்: டிராய் உத்தரவு

Priya
664 Views
1 Min Read

மொபைல் டேட்டா தேவை​யில்​லாத பயனர்​களுக்கு நிவாரணம் அளிக்​கும் வித​மாக, தொலைபேசி மற்​றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்​டும் குறைந்த கட்​ட​ணத்​தில் ஒரு திட்​டத்தை அறிமுகப்​படுத்த வேண்​டும் என தொலைத்​தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்​தர​விட்​டுள்​ளது.

வாடிக்கையாளர்களுக்கு தேவை​யில்​லாத இணை​யதள டேட்டாவை இணைத்து அதிக விலைக்கு ரீசார்ஜ் செய்​ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்​டாயப்​படுத்​தியது குறித்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, தொலைத்​தொடர்பு நிறு​வனங்​கள் இனி அழைப்பு மற்​றும் எஸ்​எம்​எஸ் சேவை​களை மட்​டும் கொண்ட திட்​டங்​களை கட்​டா​யம் வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்க வேண்​டும்.

டேட்டா திட்​டங்​களுக்கு வழங்​கப்​படு​வதைப் போல​வே, 30 நாட்​கள் அல்​லது ஒவ்​வொரு மாத​மும் புதுப்​பிக்​கும் வகையி​லான ரீசார்ஜ் திட்​டங்​களாக அவை இருக்க வேண்​டும் என்று டிராய் தெரிவித்துள்​ளது. இதையடுத்து, அழைப்பு மற்​றும் குறுஞ்​செய்தி சேவை​களை டேட்​டா​வில் இருந்து தனி​யாகப் பிரிப்​ப​தன் மூலம், பொது​மக்​கள் தங்​களுக்​குத் தேவை​யான சேவைக்கு மட்​டுமே பணம் செலுத்​தும் சூழல் இனி உரு​வாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply