மதுராந்தகம் திமுக வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செப்.27-ல் பிரச்சாரம்

Priya
717 Views
1 Min Read

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செப்.27-ம் தேதி மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் ஐந்துமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் போட்யிடும் வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பல்வேறு முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து வரும் செப்.27-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதில், மாமண்டூர், கருங்குழி, மதுராந்தகம் நகரப்பகுதி, அச்சிறுப்பாக்கம் மற்றும் ஒரத்தி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

பிரச்சார மேடை

மேலும், மதுராந்தகம் பகுதியில் பிரச்சார மேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply