செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அதற்கான உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநாகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த அந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.