சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தொலைத் தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் 28,200 செல்போன்கள் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,

தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன் எண்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here