‘டேப்ஸ்’ இடைக்கால நிவாரணம் ரூ.10,000 ஆக நிர்ணயம்: அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

Priya
756 Views
2 Min Read

தமிழக அரசுப்​பணி​யில் 10 முதல் 18 ஆண்​டு​கள் வரை பணியாற்றி ஓய்​வு​பெற்​றவர்களுக்கு உறு​தி​யளிக்கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் (டேப்ஸ்) இடைக்​கால நிவாரணத்​தொகை ரூ.10 ஆயிரம் மற்​றும் அதற்​குரிய டிஏ என நிர்​ண​யிக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

கடந்த ஜன.1-க்​குப் பிறகு ஓய்​வு​பெற்​றவர்​களுக்கு டேப்ஸ் இடைக்​கால நிவாரணத்​தொகை கணக்​கிடு​வது தொடர்​பாக அரசின் நிதி அமைச்​சகத்​தின் செல​வினத்​துறை செயலர் என்​.வெங்​கடேஷ் கரு​வூல கணக்​குத்​துறை இயக்​குநருக்கு கடந்த 11-ம் தேதி ஒரு கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

அந்​தக் கடிதத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: 10 ஆண்​டு​களுக்கு மேலும் 18 ஆண்​டு​களுக்​குள்​ளும் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் (டேப்​ஸ்) இடைக்​கால நிவாரணத்​தொகை​யாக ரூ.10 ஆயிரம் மற்​றும் அதற்​குரிய அகவிலைப்​படி (டிஏ) வழங்​கப்​படும். டேப்ஸ் விதி​கள் மற்​றும் நடை​முறை​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு தகு​தி​யான பணிக்​காலத்​தின் அடிப்​படை​யில் ஒவ்​வொரு ஊழியருக்​கும் அனு​ம​திக்​கத்​தக்க தொகை கணக்​கிடப்​பட்டு அதில் வரும் வித்​தி​யாசம் நிலு​வைத்​தொகை​யாக வழங்​கப்​படும்.

18 ஆண்​டு​கள் மற்​றும் அதற்கு மேற்​பட்ட காலம் பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றோருக்கு அவர்​கள் கடைசி​யாக பெற்ற அடிப்​படை ஊதி​யத்​தில் 30 சதவீதம் அல்​லது ரூ.10 ஆயிரம்​, இ​தில் எது அதி​கமோ அந்த தொகை, அதற்குரிய அகவிலைப்​படி​யுடன் சேர்த்து இடைக்​கால நிவாரணத்​தொகை​யாக வழங்​கப்​படும்.

அதே​நேரத்​தில் 18 ஆண்​டு​களுக்கு குறை​வாக பணி​யாற்​றிய​வர்​களுக்கு கடைசி​யாக பெற்ற அடிப்​படை ஊதி​யத்​தில் 30 சதவீதம் என்ற அளவில் டேப்ஸ் இடைக்​கால நிவாரணத்​தொகை அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தால், அகவிலைப் படி உள்பட வழங்​கப்​பட்ட கூடு​தல் தொகை​யானது செப்​டம்​பர் முதல் இடைக்​கால நிவாரணத்தொகை​யில் இருந்து 10 தவணை​களில் பிடித்​தம் செய்​யப்​படும்.இவ்​வாறு கூறி​யுள்​ளார்.

டேப்ஸ் இடைக்​கால நிவாரணத்​தொகைக்கு குறைந்​தபட்ச பணிக்​காலம் 18 ஆண்​டு​கள் என நிர்​ண​யிக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செயலர் சோ.சுரேஷ் வெளி​யிட்ட அறிக்​கை: அனை​வருக்​கும் இடைக்​கால அடிப்​படை ஓய்​வூ​தி​யமாக ரூ.10,000 என வரையறுத்​திருப்​பது அபத்​தம். தமிழக அரசு உடனடி​யாக டேப்ஸ் திட்​ட​ முழுவிதி​களை​யும் வெளி​யிட வேண்​டும். கடந்த 11-ம் தேதி நிதித்​துறைவெளி​யிட்ட கடிதத்தை திரும்​பப்பெற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்​க மாநில தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​கள் சு.ஜெய ராஜ​ராஜேஸ்​வரன், பி.பிரெடெரிக் எங்​கெல்​ஸ், மு.செல்​வக்​கு​மார் ஆகியோர் கூட்​டாக வெளி​யிட்ட அறிக்​கை: தவெக அரசு, அரசாணை எண் 111 மூலம் டேப்ஸ் திட்​டத்​துக்​கான வழி​காட்​டும் நெறி​முறை​கள் வெளி​யிடப்​படும் வரை, இடைக்​கால பணப்​பலன் வழங்​கும் நடை​முறை அமல்​படுத்​தப்​படும் என்று அறி​வித்​தது. கடைசி மாத ஊதி​யத்​தில் 30 சதவீத​மும், அதற்​குரிய அகவிலைப்​படி​யும் வழங்​கப்​படும் என அறி​வித்​தது.

இந்​நிலை​யில், நிதித்​துறை வெளி​யிட்​டுள்ள கடிதத்​தில் குறைந்​த​பட்ச பணிக்​காலம் 18 ஆண்​டு​கள் என நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும் அதற்கு குறை​வாக பணிபுரிந்​து, 30 சதவீதம் இடைக்​கால பணப்​பெற்ற ஓய்​வூ​தி​யரிட​மிருந்து கூடு​தலாக வழங்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத்​ தொகையை பிடித்​தம்​ செய்​ய வேண்​டும்​ என்​று அரசு உத்தர​விட்​டிருப்​பது மனித நேயமற்​றச்செயல்​. தவெக அரசின்​ இச்​செயல் ​அரசு ஊழியர், ஆசிரியர் மத்​தி​யில்​ கடுமை​யான அதிர்​ச்சியை உரு​வாக்​கி உள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply