உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு

Priya
765 Views
1 Min Read

உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வருவதற்​கான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு உதவி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக பிரதமர் நரேந்​திர மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக​வும், அதனை அதிபர் விளா​டி​மிர் புதின் வரவேற்​றுள்​ள​தாக​வும் ரஷ்யா தெரி​வித்​துள்​ளது.

டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாட்​டின் போது ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறிய​தாவது: உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளுக்கு இது​வரை எந்​தப்பலனும் கிடைக்​க​வில்​லை.

இந்நிலை​யில், மோடி, ஜி ஜின்​பிங் உக்​ரைன் போரை நிறுத்த விருப்​பம் தெரி​வித்​துள்ள செய்தி முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்க்​கப்​படு​கிறது. குறிப்​பாக, மாநாட்​டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்​பிங் மற்​றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்​சி, உலக அரங்​கில் அவர்​களின் நெருக்​க​மான உறவை​யும் ஒற்​றுமை​யை​யும் வெளிப்​படுத்​தும் வகை​யில் அமைந்​திருந்​தது.

உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டுவர வலி​யுறுத்தி அதிபர் ட்ரம்ப், சமீபத்​தில் புதினுடன் தொலைபேசி​யில் உரை​யாடி​னார். அதற்கு முன்​ன​தாக அமெரிக்​கத் தூதர்​கள் ஸ்டீவ் விட்​காஃப் மற்​றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ மற்​றும் கீவ் நகரங்​களுக்​குச் சென்று பேச்​சு​வார்த்தை நடத்​தியும் எந்​த தீர்​வும் கிடைக்​க​வில்​லை. ரஷ்யா மற்​றும் உக்​ரைன் ஆகிய இரு நாடு​களு​ட​னும் நல்​லுறவைப் பேணி வரும் சில நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்று என்​ப​தால், அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்​கான முக்​கிய​மான பால​மாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது.

வரும் டிசம்​பர் மாதம் மியாமி​யில் நடை​பெறவுள்ள ஜி-20 மாநாட்​டில் அதிபர் புதின் பங்​கேற்​றால், தானும் அதில் கலந்​து​ கொண்டு அவரை நேரில் சந்​திக்​கத் தயா​ராக இருப்​ப​தாக உக்​ரைன் அதிபர் ஜெலென்​ஸ்கி தெரி​வித்​துள்​ளார். இந்த சந்​திப்பு நடை​பெற்​றால், போர் தொடங்​கிய பிறகு இரு தலை​வர்​களும் சந்​திக்​கும் முதல் நேர்​முக சந்​திப்​பாக இது அமை​யும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply