சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் 34 மின் மோட்டார்கள் பறிமுதல்: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

Priya
789 Views
1 Min Read

தண்​டை​யார்​பேட்​டை, அம்​பத்​தூர், அண்ணா நகர், தேனாம்​பேட்​டை, கோடம்​பாக்​கம், அடை​யாறு மற்​றும் பெருங்​குடி மண்​டலங்​களில் சட்ட விரோத​மாக பொருத்​தப்​பட்​டிருந்த 34 குடிநீர் உறிஞ்​சும் மின் மோட்​டார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: குடிநீர் விநி​யோகத்​தில் ஏற்​படும் அழுத்​தக் குறை​பாடு தவிர்க்​கப்​பட்​டு, அப்​பகு​தி​யில் உள்ள அனைத்து நுகர்​வோருக்​கும் சீரான மற்​றும் சமமான குடிநீர் விநி​யோகம் உறுதி செய்​யும் வகை​யில் மண்​டலம் 1 முதல் 15 வரையி​லான அனைத்து பகு​தி​களி​லும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இக்​குழு​வினர் ஆய்வு மேற்​கொள்​ளும்​போது, குடிநீர் இணைப்​பு​கள் மற்​றும் பொது குழாய்​களில் சட்​ட​விரோத​மாக குடிநீர் உறிஞ்​சும் மின் மோட்​டார்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளது கண்​டறியப்​பட்​டால் மின் மோட்​டார்​கள் பறி​முதல் செய்​யப்​படு​வதோடு உரிய சட்​ட​வி​தி​களின் கீழ் கடும் நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும் என ஏற்​கெனவே பொது​மக்​களுக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் (செப்​.7-ம் தேதி) சிறப்பு கண்​காணிப்பு குழு​வினர் ஆய்வு மேற்​கொண்​ட​போது தண்​டை​யார் பேட்டை மண்​டலத்​தில் எம்​.கே.பி நகர், அம்​பத்​தூர் மண்​டலத்​தில் ஒ.டி பேருந்து நிலை​யம், முகப்​பேர், அண்ணா நகர் மண்​டலத்​தில் சூளைமேடு, தேனாம்​பேட்டை மண்​டலத்​தில் வள்​ளுவர் கோட்​டம், கிரீம்ஸ் ரோடு, டிரஸ்ட்​புரம், கோடம்​பாக்​கம் மண்​டலத்​தில் எம்​.ஜி.ஆர் நகர், அடை​யாறு மண்​டலத்​தில் தரமணி, பெருங்​குடி மண்​டலத்​தில் கொட்​டி​வாக்​கம், மற்​றும் கந்​தன்​சாவடி ஆகிய இடங்​களில் குடிநீர் குழாய்​களில் சட்ட விரோத​மாக குடிநீர் உறிஞ்​சும் மின்​மோட்​டார்​கள் பொருத்​தப்​பட்​டிருந்​தது கண்​டறியப்​பட்டு 34 மின்​மோட்​டார்​கள் உடனடி​யாக பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஏற்​கெனவே அடை​யாறு மண்​டலத்​தில் மட்​டும் சட்ட விரோத​மாக பொருத்​தப்​பட்​டிருந்த 55 குடிநீர் உறிஞ்​சும் மின்​மோட்​டார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டதுடன், இது​வரை 89 மின்​மோட்​டார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன, மேற்​கூறிய இடங்​களில் உள்ள குடி​யிருப்​பு​களின் உரிமை​யாளர்​களுக்கு இனிவரும் காலங்​களில் சட்ட விரோத​மாக குடிநீர் உறிஞ்​சும் மின்​மோட்​டார்​களை பயன்​படுத்​தக் கூடாது.

மீறு​வோரின் மீது உரிய சட்ட வி​தி​களின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும் என நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply