‘புலவர்’ பட டீசர் வெளியீடு! – மறைந்த பாரதிராஜாவின் கடைசி படம்!

Priya
1287 Views
1 Min Read

மறைந்த இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த டீசர், காவல் நிலையம் போல போல வடிவமைக்கப்பட்ட ஓர் அறையில் வேஷ்டி, பனியனில் இருக்கும் பாரதிராஜா, நான்கு பேரிடம் ஒரு கொலை பற்றி விசாரிக்கிறார். வார்த்தைகளில் தீவிரம் காட்டும் அவரின் விசாரணையானது கேரம், டேபிள் டென்னிஸ் விளையாட்டு என செயல்களில் கலகலப்பூட்டுகிறது.

1.08 நிமிடம் ஓடும் டீசர் படம் பற்றி அதிகம் யூகிக்க இடமளிக்கவில்லை என்றாலும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

முருகைய்யா எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜாவுடன், ரேச்சல் ரெபக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா, பூபாலம் செந்தில், சப்ளின் சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சூப்பர் டாக்கீஸ் மற்றும் வொயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் ‘புலவர்’ படத்துக்கு ஆர்.வி.சரண் ஒளிப்பதிவும், தனசேகர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். அஜ்மல் கான் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா, ஜூன் 10-ம் தேதி காலமானார். அவர் இறுதியாக நடத்த படம் இது என்பதால் இயல்பாகவே படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்தப் படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply