தடுமாறிய திமுக எம்எல்ஏவை கைதூக்கிவிட்ட முதல்வர் விஜய்

Priya
913 Views
1 Min Read

சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு அளிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் அருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்தார்.

அதன்பின்னர், தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களில் ஒருவரான திருவையாறு தொகுதி எம்எல்ஏதுரை சந்திரசேகரன் எழுந்திருக்க முயன்றபோது தடுமாறினார்.

இதைக் கவனித்த முதல்வர் விஜய் உடனடியாக கைகொடுத்து அவரை தூக்கிவிட்டார். இதைப் பார்த்த அமைச்சர்கள் மற்றும் தவெக எம்எல்ஏ-க்கள் மேஜையைத் தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply