‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம்!

Priya
813 Views
1 Min Read

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலுக்கு ‘முண்டாசுப்பட்டி’, ‘நேற்று இன்று நாளை’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ போன்று பேசும்படியான வெற்றிகள் பல அமைந்திருக் கின்றன. இவற்றில் எந்தப் படமும் 50 கோடி வசூலைத் தொட்டதில்லை.

ஆனால், செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ படம், வெளியான 15 நாள்களில் 55 கோடியைத் தாண்டி வசூலித்தது. ‘50 கோடி வசூலைத் தாண்டிய எனது முதல் படம்’ என்று விஷ்ணு விஷாலே இதைத் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

முதலில் 350 திரையரங்குகளில் வெளியான படம், பின்னர் 700 திரையரங்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. படத்தின் அபார வசூல் காரணமாக, நாயகன் விஷ்ணுவிஷாலுக்கு ‘பி.எம்.டபிள்யூ’ காரைப்பரிசளித்தார், படத்தின் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கே.கணேஷ்.

கடந்த 6 வாரங்களில் வெளியான படங்களில் பலவும் வெற்றிப் படங்களாக மாறினாலும் ‘கட்டா குஸ்தி 2’, 50 நாள்களைக் கடந்து பல திரை யரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படக்குழு தற்போது இதனைப் பெரிய விழாவாகக் கொண்டாடியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply