ரூ.2 லட்​சம் கோடியை எட்​டிய ஜிஎஸ்டி வசூல்

Priya
770 Views
2 Min Read

கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் நாட்​டின் மொத்த சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.2 லட்​சம் கோடியை எட்டி உள்​ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்​துக்​கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்​களை மத்திய நிதியமைச்சகம் வெளி​யிட்​டுள்​ளது. இதன்​படி, ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,99,853 கோடி ஆகி​யுள்​ளது.

இது 2025 ஆகஸ்ட் மாதத்​தில் வசூலான ரூ.1,74,116 கோடியை​விட அதி​கம். கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் கூடு​தலாக வசூலான ரூ.31,795 கோடி வரி திருப்​பித் தரப்​பட்ட பின்​னர், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1,68,057 கோடி​யாக இருந்​தது. 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதத்​தில் ஜிஎஸ்டி வரி விகிதங்​கள் குறிப்​பிடத்​தக்க அளவில் சீரமைக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, மாதாந்​திர ஜிஎஸ்டி வசூல் தற்​போது சுமார் ரூ.2 லட்​சம் கோடி என்ற அளவில் உள்​ள​தாக நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு செப். 3-ம் தேதி நடை​பெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​தில், செப். 22 முதல் எளிமைப்​படுத்​தப்​பட்ட 5 மற்​றும் 18 சதவீதம் என இரு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்​தது. இதுத​விர ஆடம்​பரப் பொருட்​கள் மற்​றும் உடல்​நலத்​துக்கு கேடு விளைவிக்​கும் பொருட்​களுக்கு 40 சதவீத சிறப்பு வரி விகித​மும் அறிவிக்​கப்​பட்​டது.

வரி நடை​முறை​களை மேலும் எளி​தாக்​கு​வது தொடர்​பாக பல்​வேறு திட்​டங்​களை பரிசீலிக்க, 57-வது ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் வரும் 12-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், வரி விகித சீரமைப்​பின் தாக்​கம் குறித்து ஆய்வு செய்​யப்​படும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​தி​யா​வில் கேபிஎம்ஜி நிறு​வனத்​தின் மறை​முக வரிப் பிரிவு பங்​கு​தா​ரரும், தேசி​யத் தலை​வரு​மான அபிஷேக் ஜெயின் கூறும்​போது, “ஒட்​டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் 14.8 சதவீத வலு​வான வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது.

இதனுடன் முதல் காலாண்​டில் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) 7.8 சதவீத வளர்ச்​சி​யும் பதிவாகியுள்​ளது. புவி​சார் அரசி​யல் மோதல்​கள் மற்​றும் உலகளாவிய பொருளா​தார நிச்​சயமற்ற நிலை இருந்த போதிலும், இந்​தி​யப் பொருளாதாரம் வலுவாக இருப்பதை இவை காட்டுகின்றன” என்றார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply