திமுக ஆட்சி செய்த சாதனைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பலனடைந்தவர்களின் பேட்டிகளை ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு.மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது.
நாடும் மாநிலமும் பயனுற எந்தாளும் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை தொடர்வேன். 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
https://x.com/mkstalin/status/1787656092694237316