டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் விழிப்படல நுண் துளை சீரமைப்பு மையம்: முதல்வர் விஜய் திறந்துவைத்து பார்வையிட்டார்

Priya
767 Views
2 Min Read

டாக்​டர் அகர்வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள உலகின் முதல் விழிப்​படல நுண் துளை சீரமைப்பு மையத்தை முதல்​வர் விஜய் திறந்​து​ வைத்து பார்​வை​யிட்​டார்.

சென்னை ஆழ்​வார்​பேட்டை டிடிகே சாலை​யில் உள்ள டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யில் உலகின் முதலா​வது ‘பின்​ஹோல் பியூபிலோபிளாஸ்டி – பிபிபி’ (விழிப்​படல நுண் துளை சீரமைப்​பு) சிகிச்​சைக்​கான பிரத்​யேக மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மையத்தை முதல்​வர் விஜய் திறந்து வைத்​தார். இந்த சிகிச்சை செய்து கொண்​ட​வர்​களிடம் பார்​வைத் திறன் குறித்து கேட்​டறிந்​தார். விழி வெண்​படலத்தை (கார்​னி​யா) மாற்​றாமல், இந்த தொழில்​நுட்​பம் மூலம் எவ்​வாறு சிகிச்சை அளிக்​கலாம் என்​பது குறித்து மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் தலை​வர் அமர் அகர்​வால், முதல்​வருக்கு விளக்​கி​னார்.

இந்த பிரத்​யேக மையம் குறித்து மருத்​து​வர் அமர் அகர்​வால் கூறிய​தாவது:விழி வெண்​படலத்​தில் பாதிப்பு ஏற்​படும்​போது பார்​வைத் திறன் பாதிக்​கப்​படும். இதற்கு விழிப்​படல மாற்று சிகிச்சை மட்​டுமே இது​வரை தீர்​வாக உள்​ளது.

அதற்​கான அறுவை சிகிச்​சை​யில் தொற்று அதி​கரிக்​க​வும், உறுப்பு நிராகரிக்​கப்​பட​வும் வாய்ப்​பு​கள் அதி​கம். இதனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு பதிலாக, சேதமடைந்த விழிப்​படலத்​தின் முழு அடர்த்​தி​யை​யும் சரிசெய்து விழி​யின் உட்​புறத் திசுக்​களை மீண்​டும் சீராக்​கும் சிகிச்​சைகளை நாங்​கள் மேற்​கொள்​கிறோம்.

அதன்​படி, விழி வெண்​படலத்தை சரிசெய்து ஒளிப் பிறழ்வு பாதிப்பை தடுக்​கும் வகை​யில், ‘பின்​ஹோல் பியூபிலோபிளாஸ்​டி’ என்ற சிகிச்சை முறையை அளிக்​கிறோம்.

இதன்​மூலம் கண் பாவை (பாப்​பா) குறிப்​பிட்ட அளவு சுருக்​கப்​படு​கிறது. ஒரே நேரத்​தில் செய்​யப்​படும் இந்த சிகிச்​சை​யால் மீண்​டும் பார்​வைத் திறன் கிடைப்​பது உறுதி செய்​யப்​படு​கிறது.

தவிர, விழிப்​படல மாற்று அறுவை சிகிச்சை தேவைப்​படும் அனை​வருக்​கும் போதிய அளவு கொடை​யாளர்​கள் கிடைப்​ப​தில்​லை. எனவே, பிபிபி சிகிச்சை அதற்​கும் சரி​யான தீர்​வாக அமை​கிறது.

இந்த பிரத்​யேக சிகிச்சை மையம் மூலம் ஏராள​மான நோயாளி​களுக்கு மீண்​டும் பார்வை கிடைப்​பதை உறுதி செய்ய முடி​யும். இவ்​வாறு அவர் கூறி​னார். விட்​ரியோ – ரெட்​டினல் சேவை​கள் பிரிவு இயக்​குநர் மனோஜ் கத்​ரி, இயக்​குநர் அதியா அகர்​வால், மருத்​துவ சேவை​களின்​ பிராந்​தி​ய தலை​வர்​ சவுந்​தரி உள்​ளிட்​டோர்​ உடன்​ இருந்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply