தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், வாக்காளர் சிவராஜ் ஆகியோர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இந்த வழக்குகளை நிராகரிக்கக்கோரி விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு வழக்கு தொடர்ந்துள்ள திமுக வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.3-க்கு தள்ளி வைத்துள்ளார்.

