காப்புரிமை சர்ச்சையில் டாப்ஸியின் ‘காந்தாரி’

Priya
833 Views
1 Min Read

நடிகை டாப்ஸி நடித்​துள்ள ‘காந்​தா​ரி’ திரைப்​படம் காப்​புரிமை சர்ச்​சை​யில் சிக்​கி​யுள்​ளது. ஆக் ஷன் த்ரில்​லர் படமான இதை தேவஷிஷ் மகிஜா இயக்​கி​யுள்​ளார். கனிகா தில்​லான் தயாரித்​துள்ள இப்​படத்​தில் ஸ்வஸ்​திகா முகர்​ஜி, மிதா வசிஷ்ட், சாயா கதம் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படம் செப்​.3-ம் தேதி நெட்​பிளிக்ஸ் தளத்​தில் நேரடி​யாக வெளி​யாகிறது.

இந்​நிலை​யில் எழுத்​தாளர் கல்​யாண் பண்டி என்​பவர் இப்​படத்​தின் கதை, 2019-ம் ஆண்டு தான் எழுதி பதிவு செய்த கதையை போன்​றுள்​ள​தாகக் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

“கடத்​தல் கும்​பலிடம் சிக்​கிய தனது குழந்​தையை மீட்​கப் போராடும் ஒரு தாய், பின்​னர் சக்​தி​வாய்ந்த போராளி​யாக மாறு​வது​தான் அந்​தக் கதை​யின் மையக்​கரு. இந்​தக் கதையை அப்​போது வூட் நிறு​வனத்​தில் இருந்த மோனிகா ஷெர்​கில் என்​பவரிடம் பகிர்ந்​தேன். பின்​னர் 8 பக்க ஸ்கிரிப்ட் மற்​றும் கதை​யின் சுருக்​கத்தை அனுப்​பினேன். மோனிகா ஷெர்​கில் இப்​போது நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​தில் முக்​கிய பொறுப்​பில் உள்​ளார்” என்று கூறி​யுள்​ளார்.

இந்​தக் குற்​றச்​சாட்டை கனிகா தில்​லானின் நிறு​வனம் மறுத்​துள்​ளது. ‘காந்​தா​ரி’ முற்​றி​லும் அசல் படைப்பு என்​றும், அதன் கதை மற்​றும் திரைக்​கதை முழு​வதும் கனிகா தில்லானுடைய சொந்​தப் படைப்பு என்​றும்​ தெரி​வித்​துள்​ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply