திரைப்படம் மற்றும் சொந்த தொழில் என்று மிகவும் பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா, இறுதியாக தமிழில் வெளியான “அன்னப்பூரணி” படத்தில் நடித்திருந்தார். தற்போது, யாஷ் நடிப்பில் உருவாகும் “Toxic” என்ற படத்தில் சகோதரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாள தொகுப்பாளராக பணியாற்றி வந்த நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று கோலிவுட் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் திகழ்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
“கேஜிஎஃப்” படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் யாஷ், தற்போது “Toxic” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அப்பாடக்கதையை எழுதியுள்ளார்.
“Toxic” படத்தின் கதைகளம் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து விட்டதால், நிச்சயம் தான் அந்த படத்தில் நடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.