உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து, ஆயுஷ் போராடி தோல்வி
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ரின் இவாங்கா, கீ நாகனிஷி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஷீ யி-யுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது.
சாட்விக் – ஷிராக் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஷ்டோ, துருவ் கபிலா ஜோடி 16-21, 5-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் ஃபங்ஹுய், குவோ சின்வா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப், யாப் ராய் கிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக் – ஷிராக் ஜோடி 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தது.உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ரின் இவாங்கா, கீ நாகனிஷி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஷீ யி-யுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது.
சாட்விக் – ஷிராக் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஷ்டோ, துருவ் கபிலா ஜோடி 16-21, 5-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் ஃபங்ஹுய், குவோ சின்வா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப், யாப் ராய் கிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக் – ஷிராக் ஜோடி 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தது.