சென்னையில் 8 நாட்களில் 22,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

Priya
716 Views
1 Min Read

எட்டு நாட்​களில் 22 ஆயிரம் தெரு​நாய்​களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்​தப்​பட்​டுள்​ள​தாக சென்னை மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் வெறி​நாய்க்​கடி நோய் பாதிப்​பிலிருந்து பொது மக்​களை காக்​க​வும், வெறி​நாய்க்​கடி நோய் இல்லா சென்னை மாநகரை உரு​வாக்​க​வும் அனைத்து தெரு நாய்​களுக்​கும் வெறி​நாய்க்​கடி நோய்த் தடுப்​பூசி மற்​றும் அகப்​புற ஒட்​டுண்ணி மருந்து செலுத்​தும் மாபெரும் முகாம் கடந்த 11-ம் தேதி திரு​வொற்​றியூர், மணலி, தண்​டை​யார்​பேட்டை ஆகிய 3 மண்​டலங்​களில் தொடங்​கப்​பட்​டது.

இது​வரை 8 நாட்​களில் 22,158 தெரு​நாய்​களுக்கு வெறி​நாய்க்​கடி நோய் தடுப்​பூசி மற்​றும் அகப்புற ஒட்​டுண்ணி நீக்​கும் மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும் தலா 10 குழுக்​களை பயன்​படுத்தி ஒரே சமயத்​தில் 3 மண்​டலங்​களில் இந்த சிறப்பு முகாம் நடை​பெற்று வரு​கிறது.

இந்த 3 மண்​டலங்​களில் இந்த சிறப்பு முகாம் முடிவுற்​றவுடன், பிற மண்​டலங்​களி​லும் இம்​மு​காம் நடத்​தப்​பட்டு 75 வேலை நாட்​களுக்​குள் அனைத்து மண்​டலங்​களி​லும் சுமார் 2 லட்​சம் நாய்​களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்​பூசி​யும் மற்​றும் அக, புறஒட்​டுண்ணி நீக்கும் மருந்​தும் செலுத்​தப்​பட​உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply