மத்திய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழகம் ரூ.3,200 கோடி வருவாய் இழக்கும் அபாயம்: தங்கம் தென்னரசு, கனிமொழி குற்றச்சாட்டு

Priya
728 Views
2 Min Read

மக்​களவை​யில் பாஜக அரசு அறி​முகப்​படுத்​தி​யுள்ள கனிம வளங்​கள் திருத்த மசோதா காரண​மாக தமிழகம் ரூ.3,200 கோடி வரு​வாயை இழக்​கும் அபா​யம் உள்​ளது.

எனவே, இந்த மசோதாவை திரும்பப் பேற வேண்டும் என திமுக முன்​னாள் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்​ளனர்.

இதுதொடர்​பாக எக்ஸ் தளப் பதி​வில் அவர்கள் கூறி​யிருப்​ப​தாவது:

தங்கம் தென்னரசு: மக்​களவை​யில் மத்​திய பாஜக அரசு அறி​முகப்​படுத்​தி​யுள்ள கனிம வளங்​கள் திருத்த மசோதா, அரசி​யலமைப்பு உறுதி செய்​யும் நிதிக் கூட்​டாட்சி தத்​து​வத்​தின் மீதான நேரடி தாக்​குதலாகும்.

ஒரு மாநிலம் கொண்​டிருக்​கும் கனிம வளங்​கள் மூலம் எவ்​வித வரி வரு​வா​யும் அந்த மாநிலம் ஈட்ட முடி​யாத வகை​யில் திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் உச்ச நீதி​மன்​றத்​தின் 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யலமைப்பு அமர்​வு, பட்​டியல் II-ன் 50-வது பிரி​வின் கீழ், மத்​திய அரசு நிர்​ண​யிக்​கும் ராயல்​டியி​ல் இருந்து தனித்​து, கனிம வளங்​கள் மற்​றும் கனிமம் நிறைந்த நிலங்​கள் மீது வரி விதிக்​கும் அதி​காரம் மாநிலங்​களுக்கு உண்டு என்று தெளி​வாக உறுதி செய்த தீர்ப்பை இந்த மசோ​தா​ மறுக்​கிறது.

வரு​வாய் ஈட்​டும் அதி​காரத்தை மாநிலங்​களிட​ம் இருந்து பறிக்​கும் வகை​யில் இந்த சட்ட மசோதா கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

இது நடை​முறைக்கு வந்​தால், தமிழகம் சுமார் ரூ.3,200 கோடி வரு​வாயை இழக்​கும் அபா​யம் உள்​ளது. அந்த வரு​வாய் மாநிலத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​களுக்​கும் மக்​கள்​நலப் பணி​களுக்​கும் பயன்​படுத்​தப்பட வேண்​டிய​தாகும்.

நிதி உரிமை பறிப்பு

மாநிலங்​களின் இயற்கை வளங்​களை மாநிலங்​களே நிர்​வகித்​து, அதி​ல் இருந்து கிடைக்​கும் வரு​வாயை அந்​தந்த மாநிலங்​களே பயன்​படுத்​தும் உரிமை​யைப் பறித்​து, அதி​காரத்தை மத்தியில் குவிப்​பது கூட்​டாட்​சி​யின் அடித்​தளத்​தையே பலவீனப்​படுத்​தும். சீர்​திருத்​தம் என்ற பெயரில் மாநிலங்​களின் நிதி உரிமை​யைப் பறிப்​பதை ஒரு​போதும் நாம் ஏற்க முடி​யாது.

எனவே, தமிழகத்தின் உரிமை​யை​யும், வரு​வாய் ஆதா​ரத்​தை​யும் பாதிக்​கும் இந்த மசோ​தாவை எதிர்ப்​ப​தோடு, மாநிலங்​களின் நிதி சுயாட்சி மேலும் பறி​போ​காமல் நாம் பாது​காக்க வேண்​டும்.

கனி​மொழி: கனிம வளங்​கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்​ளிட்ட நிதி அதி​காரங்​களைப் பறிக்​கும் வகை​யில், சுரங்​கங்​கள், கனிமங்​கள் சட்​டத் திருத்த மசோ​தாவை மக்​களவை​யில் முறை​யான விவாதங்​களின்றி மத்​திய பாஜக அரசு நிறை​வேற்​றி​யுள்​ளது. இது, மாநில உரிமை​கள் மீதான நேரடி தாக்​குதல்.

கடந்த 2024-ல் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்த மாநிலங்​களின் கனிம வளங்​கள் மீதான வரி விதிக்​கும் அதி​காரத்​தையே இந்த திருத்​தச் சட்​டம் நீர்த்​துப்​போகச் செய்​வதோடு, சுற்​றுச்​சூழலுக்கு பேராபத்தை விளை​வித்​து, மாநிலங்​களின் நிதி சுயாட்​சியை பறிக்​கும் நோக்​கத்

தோடு அமைந்​துள்​ளது. எனவே, இந்த சட்​டத் திருத்​தத்தை மத்​திய பாஜக அரசு திரும்ப பெற வேண்​டும். இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​துள்​ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply