திரைத் துறையை ஒன்றிணைக்க தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகம்: முதல்வருக்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

Priya
882 Views
1 Min Read

தென்​னிந்​தி​யத் திரைப்​படத் தொழிலா​ளர் சம்​மேளனத்​துக்​கு (பெப்​சி), 2 வருடத்​துக்கு ஒரு முறை தேர்​தல் நடை​பெறு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில் இதன் தலை​வ​ராக ஆர்​.கே.செல்வமணி போட்​டி​யின்றி மீண்​டும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தொடர்ந்து 5-வது முறை​யாக பெப்சி தலை​வ​ராகி​யுள்ள அவர் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​த​போது கூறிய​தாவது: தமிழ் சினிமா தற்​போது சிரம​மான நிலை​யில் இருக்​கிறது.

அதாவது சில திரைப்​படங்​கள் பல கோடி வசூலை எட்​டு​வதும் சில திரைப்​படங்​கள் திரையரங்​கு​களில் கூட வெளி​யிட முடி​யாத சூழலிலும் இருக்​கின்றன.

நான் இயக்​குந​ராக அறி​முக​மாகும்​போது சின்ன பட்​ஜெட் படங்​களும் பெரிய பட்​ஜெட் படங்​களும் ஒரே நேரத்​தில் வெளி​யாகி வெற்​றி​பெற்​றன.

இப்​போது ஒரே படம் அதிக திரையரங்​கு​களில் வெளி​யிடப்​படு​வதும் பல திரைப்​படங்​களுக்​குத் திரையரங்​கு​களே கிடைக்​காத சூழலும் உள்​ளன.

இதனால் சிறிய படங்​களைத் தயாரிப்​பதும் அதில் பணி புரிவதும் கடின​மாக உள்​ளது. எனவே தமிழக முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்ள விஜய்க்கு சிறிய வேண்​டு​கோளை வைக்​கிறோம்.

தேசி​யத் திரைப்பட வளர்ச்​சிக் கழகம் இருப்​பது போல தமிழ்த் திரைப்பட வளர்ச்​சிக் கழகம் என்று இருந்​தால் ஓர் அரசின் கீழ் இயங்​கு​கின்ற அமைப்​பாக திரைத்​துறை மாறும். அப்​படி மாறி​னால் தொழிற்​சாலை போன்ற பாது​காப்​பும் கட்​டமைப்​பும் ஏற்​படும்.

எனவே தமிழக முதல்​வர், தமிழ்த் திரைப்பட வளர்ச்​சிக் கழகம் என்ற அமைப்​பின் மூலம் தமிழ்த் திரைத்துறையை ஒன்​றிணைக்​க வேண்​டும்​ என்​பது எங்​களது வேண்​டு​கோள்​. இவ்​​வாறு ஆர்​.கே.செல்​வ​மணி கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply