“ஹாக்கி உலகக் கோப்பையை இம்முறை தட்டி தூக்குவோம்” – இந்திய மகளிர் அணியின் கேப்டன் சலிமா நம்பிக்கை

Priya
792 Views
3 Min Read

உல​கக் கோப்பை ஹாக்கி தொடரில் சவாலான பிரி​வில் இடம் பெற்​றுள்ள போதிலும் நேஷன்ஸ் கோப்​பையை வென்​றுள்​ளது நம்​பிக்​கையை கொடுத்​துள்​ள​தாக இந்​திய மகளிர் அணி​யின் கேப்​டன் சலிமா டெட் தெரி​வித்​துள்​ளார்.

மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 15-ம் முதல் 30-ம் தேதி வரை நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெறுகிறது. 16 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இந்​திய அணி ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது.

சலிமா டெட் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி சமீபத்​தில் நியூஸிலாந்​தில் நடை​பெற்ற நேஷன்ஸ் கோப்​பையை வென்ற உற்​சாகத்​துடன் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க உள்​ளது.

இந்​நிலை​யில் சலிமா டெட் கூறிய​தாவது: இந்த முறை, எஃப்​ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை எங்​களு​டைய​தாக இருக்​கும்.

நாங்​கள் திறமை​யாக​வும், அதிரடி​யாகத் தாக்​கி​யும் விளை​யாடிப் பதக்​கத்​தோடு திரும்​புவோம். எங்​களது அணி​யின் மீது எனக்கு முழு நம்​பிக்கை உள்​ளது. அதைச் செய்து காட்​டும் திறமை எங்​களிடம் இருக்​கிறது.

நியூஸிலாந்​தில் நாங்​கள் விளை​யாடிய கடைசித் தொட​ரான நேஷன்ஸ் கோப்பை மிகப்​பெரிய வெற்​றி​யாக அமைந்​தது. எனவே இந்த முறை, உலகக் கோப்​பை​யிலும் பதக்​கம் வெல்​வதே எங்​களின் இலக்​கு. ஒவ்​வொரு போட்​டி​யும் மிக முக்​கிய​மானது.

அனைத்​துப் போட்​டிகளை​யும் நாங்​கள் ஒரே மாதிரி​யான முக்​கி​யத்​து​வத்​துடனே அணுகு​வோம். எங்​களின் மிகச்​சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்தி தங்​கப் பதக்​கம் வெல்​வ​தில் உறு​தி​யாக இருக்​கிறோம்.

உலகக் கோப்​பை​யில் விளை​யாடு​வது ஒவ்​வொரு வீராங்​க​னை​யின் கனவாகும். இது எங்​களுக்கு மிகப்​பெரிய வாய்ப்​பு. நேஷன்ஸ் கோப்​பை, புரோ லீக் தொடர்​களைப் போல​வே, இதி​லும் உலகின் முன்​னணி அணி​கள் போட்​டி​யிடும்.

ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் நெருங்கி வரும் வேளை​யில், பலம் வாய்ந்த அணி​களை எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும் என்​பதை நாங்​கள் அறிவோம்.

உலகக் கோப்​பை​யில் எங்​கள் பிரிவு மிக​வும் சவாலானது; எனவே கடின​மான போட்​டிகளுக்கு எங்​களை நாங்​கள் தயார்​படுத்தி வரு​கிறோம். தெளி​வான திட்​ட​மிட்ட வியூ​கத்​துட​னும், வெற்​றி​பெறும் மனநிலை​யுட​னும் ஒவ்​வொரு போட்​டி​யிலும் களம் இறங்​கு​வதே எங்​களின் இலக்​காகும்.

எனக்கு பதற்​ற​மாகத்​தான் இருக்​கிறது, அது இயல்​பானது​தான். ஒவ்​வொரு வீராங்​க​னை​யும் இந்த உணர்​வைக் கடந்​து​தான் வரு​வார்​கள்.

ஆனால், களத்​தில் இறங்​கும்​போதெல்​லாம், அணிக்​காக விளை​யாட வேண்​டும், சக வீர​ராங்​க​னை​கள் ஒவ்​வொரு​வருக்​கும் உறு​துணை​யாக இருக்க வேண்​டும் மற்​றும் பொறுப்​பேற்று விளை​யாட வேண்​டும் என்று எனக்​குள்ளே சொல்​லிக்​கொள்​வேன்.

நாங்​கள் வெற்றி பெற்​றாலும் சரி, தோல்வி அடைந்​தா​லும் சரி, நான் எங்​கள் அணிக்கு உறு​துணை​யாக நிற்​பேன். அணியை உயர்த்​திப் பிடிக்​கும் ஒரு முன்​மா​திரி​யாக இருக்க விரும்​பு​கிறேன்.

யாராவது தவறு செய்​தா​லும் பரவா​யில்​லை, அதிலிருந்து கற்​றுக்​கொண்டு எங்​களை உயர்த்​திக் கொள்​வோம். அணிக்கு நேர்​மறை​யான எண்​ணங்​களை​யும் சுறுசுறுப்​பான ஆற்​றலை​யும் கொண்டு வர விரும்​பு​கிறேன்.

ஜூனியர் வீரர்​கள் அணிக்​குள் வரும்​போது அதிக அளவி​லான ஆற்​றலைக் கொண்டு வரு​கிறார்​கள். அவர்​கள் எப்​போதும் எங்​களிடம், ‘அக்கா நாம் கடுமை​யாக உழைக்க வேண்​டும், சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்த வேண்​டும், பதக்​கத்தை நாம் வெல்ல வேண்​டும்’ என்று சொல்​வார்​கள்.

அவர்​களிடம் இருந்து இதைக் கேட்​பது எங்​கள் அனை​வருக்​கும் நேர்​மறை​யான ஆற்​றலைத் தரு​கிறது. எந்​தவொரு அழுத்​த​மும் இன்றி சுதந்​திர​மாக ஆட்​டத்தை ரசிக்​கு​மாறு ரசித்து விளை​யாடு​மாறு இளம் வீராங்​க​னை​களிடம் கூறு​வேன்.

அழுத்​தங்​களைச் சுமப்​பது அவர்​களின் வேலை இல்​லை. அதைக் கையாள சீனியர்​களான நாங்​கள் இருக்​கிறோம். இளம் வீராங்​க​னை​கள் தங்​கள் ஆட்​டத்​தில் மட்​டும் கவனம் செலுத்​தி, களத்​தில் தங்​கள் திறமையை முழு​மை​யாக வெளிப்​படுத்த வேண்​டும் என்​பதே எனது விருப்​பம்.

அவர்​கள் மன அழுத்​தமின்றி சுதந்​திர​மாக விளை​யாடும்​போது, சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​துகிறார்​கள். அது ஒட்​டுமொத்​த அணிக்​கும்​ பெரிதும்​ உதவு​கிறது இவ்​வாறு சலி​மா டெட்​ கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply