2025-ல் பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.187 கோடி செலவு

Priya
904 Views
1 Min Read

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஞ்சய் சிங் மற்றும் வி. சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், கடந்த 2025-ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக சுமார் ரூ.187 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக பிரான்ஸுக்குச் செல்ல ரூ.25.59 கோடியும், பிரேசிலுக்கு செல்ல ரூ.17.72 கோடியும், அமெரிக்கா வுக்கு செல்ல ரூ.16.54 கோடியும், சவுதி அரேபியாவுக்கு செல்ல ரூ.15.54 கோடியும், சீனாவுக்கு செல்ல ரூ.10.59 கோடியும், இங்கிலாந்துக்கு செல்ல ரூ.9.91 கோடியும் செலவாகி உள்ளது. மேலும், நடப்பு 2026-ம் ஆண்டில் இதுவரை ரூ.74.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் ஜூலை மாதத்தில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கான பயணச் செலவுகளும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply