ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ ஆக.21-ல் ரிலீஸ்!

Priya
611 Views
1 Min Read

ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீடு குறித்து ரியோ ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தீவிரமான கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ‘ராம் IN லீலா’ திரையரங்குகளில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ‘ராம் IN லீலா’ படத்தில் நடித்து வந்தார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வர்திகா ஜெயின் நாயகியாக நடித்துள்ளார்.

ராமசந்திரன் கண்ணன் இயக்கி இருக்கும் ‘ராம் IN லீலா’ படத்துக்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவாளராகவும், அன்கிட் மேனன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply