தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினம்: அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Priya
787 Views
2 Min Read

சுதந்​திர போராட்ட வீரர் தீரன் சின்​னமலையின் 221-வது நினைவு தினத்​தையொட்டி தமிழக அரசு சார்​பில் நேற்று மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

சுதந்​திர போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் நினைவு தின​மான ஆகஸ்ட் 3-ம் தேதி​யன்​று, தமிழக அரசு சார்​பில் ஆண்​டு​தோறும் மரி​யாதை செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

அந்த வகை​யில் அவரது 221-வது நினைவு தினத்​தையொட்​டி, சென்னை கிண்டி திருவிக தொழிற்​பேட்டை வளாகத்​தில் அமைந்​துள்ள தீரன் சின்​னமலை​யின் சிலைக்கு அரு​கில் வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப்​படத்​துக்கு அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஏ.ராஜ்மோகன், எஸ்​.​ராஜேஷ்கு​மார், ரா.கு​மார் ஆகியோர் மாலை அணி​வித்​தும், சிலைக்கு கீழ் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த சின்​னமலை​யின் படத்​துக்கு மலர் தூவி​யும் மரி​யாதை செலுத்​தினர்.

தன்​னம்​பிக்​கை, தேசப்​பற்​று

இந்​நிகழ்ச்​சி​யில் சட்​டப்​பேரவை உறுப்​பினர் எம்​.அருள் பிர​காசம், தமிழ்​வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை இயக்​குநர் அ.அருண் தம்​பு​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

அதே​போல், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, அமு​முக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், ஐஜேகே பொதுச்​செய​லா​ளர் சண்​முகம் உள்​ளிட்​டோர் தீரன் சின்​னமலை​யின் உரு​வப்​படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர்.

தீரன் சின்​னமலை நினைவு தினத்​தையொட்டி முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் விஜய்: தாய்​நாட்​டின் விடு​தலைக்​காக தனது இன்​னு​யிரைத் தியாகம் செய்த தீரன் சின்​னமலை​யின் வீரம், தன்​னம்​பிக்​கை, தேசப்​பற்​று, தியாக உணர்வு காலம் கடந்​தும் நம் தலை​முறை​களை ஊக்​கு​வித்து வரு​கிறது. சுதந்​திரக் காற்றை சுவாசிக்​கத் தன் உயிர் மூச்​சைக் கொடை​யாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்​றென்​றும் நிலைத்​திருக்​கட்​டும்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: ஆங்​கிலேய ஆதிக்​கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்​னமலை. திப்பு சுல்​தானுடன் கூட்​டணி அமைத்து பிரிட்​டிஷாருக்​குச் சிம்ம சொப்​பன​மாக விளங்​கிய விடு​தலைப் போராளி. நேரடி​யாக எதிர்​கொள்ள இயலாத எதிரி​கள் சூழ்ச்​சி​யால் அவரை தூக்​கி​லிட்​டாலும் அவர் புகழை தமிழகம் போற்​றிக் கொண்டே இருக்​கும்.

பாமக தலை​வர் அன்​புமணி: நாட்​டைக் காப்​ப​தில் தீரன் சின்​னமலை​யின் வீர வரலாற்றை அடுத்த தலை​முறை​யினரும் அறிந்து கொள்​ளும் வகை​யில் பாடப்​புத்​தகத்​தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டி.டி.​வி. தினகரன்: போர்க்​களத்​தில் ஆங்​கிலேயப் படைகளால் வீழ்த்​தவே முடி​யாத மாவீர​ராக வலம் வந்​ததோடு, கொங்கு மண்​ணின் பெரு​மை​யாக​வும், தமிழர்​களின் வீரத்​தின் அடை​யாள​மாக​வும் தி​கழ்ந்த தீரன் சின்​னமலை​யின் துணிச்​சலை​யும் தி​யாகத்​தை​யும்​ வணங்​கிடு​வோம்​. இவ்​வாறு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply