மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த ஐஜேகே வலியுறுத்தல்

Priya
592 Views
1 Min Read

இந்​திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தலை​வர் ரவி பச்​ச​முத்து நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்டு அணை கட்​டு​வது தொடர்​பாக​வும், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தரவு குறித்​தும் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவக்​கு​மார் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் நடத்தி விவா​தித்​துள்​ளனர்.

மேகே​தாட்டு அணை திட்​டத்​தின் விரி​வான அறிக்​கையை திருத்தி அளிப்​போம் என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யுள்​ளார். ஆனால், அவர்​களின் திட்​டங்​களை எதிர்க்க, தமிழகத்​தில் மட்​டும் அனைத்​துக் கட்சி கூட்​டம் நடத்​தாமல் இருப்​பது ஏன் என்று தெரிய​வில்​லை.

அனைத்து கட்​சிகளும் ஒரு​மித்த கருத்​தில்​தான் உள்​ளனர். மேகே​தாட்டு அணை கட்​டக் கூடாது என்ற ஒற்றை நோக்​கத்​திலேயே போராடு​கின்​றனர்.

எனவே, அனைத்​துக் கட்சி கூட்​டத்தை தமிழக அரசு கூட்​டி, மேகே​தாட்​டு​வில் அணை கட்​டக்​கூ​டாது என்று வலு​வான அழுத்​தத்தை மத்​திய அரசுக்​கும், கர்​நாடக அரசுக்​கும் கொடுக்க வேண்​டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply