ஐசிசி 14-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் ஆட்டங்கள் 12 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வாண்டரர்ஸ் மைதானம் (ஜோகன்னஸ்பர்க்), செஞ்சுரியன் (ஷ்வானே), நியூலேண்ட்ஸ் மைதானம் (கேப் டவுன்), கிங்ஸ்மீட் மைதானம் (டர்பன்), செயின்ட் ஜார்ஜஸ் பார்க் (கெபெர்ஹா), மங்கவுங் ஓவல் (ப்ளோம்ஃபோன்டைன்), போலண்ட் பார்க் (பார்ல்) பஃபலோ பார்க் (கு-கோம்போ சிட்டி) ஆகிய 8 இடங்களில் நடைபெற இருக்கின்றன.
ஜிம்பாப்வேயில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ), ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் (விக்டோரியா ஃபால்ஸ்) ஆகிய 3 இடங்களில் நடைபெற இருக்கின்றன.
நமீபியாவில் விண்ட்ஹோக் நகரில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறவிருக்கிறது.
