சென்​னை​யில் ஜப்​பானிய திரைப்பட விழா

Priya
22 Views
1 Min Read

சென்​னை​யில் ஜப்​பானிய திரைப்பட விழா 3 நாட்​கள் நடைபெறுகிறது. இன்று (ஜூலை 28) முதல் 30-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவை இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் ஃபவுண்டேஷன் நடத்​துகிறது.

நுங்​கம்​பாக்​கம் கல்​லூரி சாலை​யில் உள்ள அலை​யன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்​கில் இவ்​விழா நடை​பெறுகிறது. விழா​வின் தொடக்க நாளான இன்று 6 மணிக்கு யுகிஹிகோ சுட்​சுமி இயக்கிய ‘த ஹோட்​டல் ஆஃப் மை ட்ரீம்’ ​படமும் நாளை மாலை 6 மணிக்கு யுகிகோ சோடே இயக்​கிய ‘அரிஸ்​டோகி​ராட்​ஸ்’ திரைப்படமும் திரை​யிடப்பட உள்​ளன.

ஜூலை 30-ல், 2 படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. அன்று மாலை 5 மணிக்கு ஹிரோ​யுகி நகாவோ இயக்​கிய ‘டைம் ஸ்கூப் ஹன்​டர்’, 7 மணிக்கு டோகுஹிரோ கொய்​சுமி இயக்​கிய ‘த லைன்ஸ் டிரா மீ’ ஆகிய படங்​கள் திரை​யிடப்​பட​வுள்​ளன. திரைப்பட விழா​வில் இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் ஃபவுண்​டேஷன் உறுப்​பினர்​களுக்கு மட்​டுமே அனு​மதி வழங்​கப்​படும்.

உறுப்​பினர் அடை​யாள அட்டை அல்​லது அழைப்​பிதழ் கட்​டா​யம். உலக சினி​மாவை தமிழ்​நாட்டு ரசிகர்​களுக்கு அறி​முகப்​படுத்​தும் முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாக, இந்த ஜப்​பானி​யத் திரைப்பட விழா ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் ஃபவுண்​டேஷன் தெரி​வித்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply