“என் மீது நீங்கள் வைத்த எல்லையற்ற நம்பிக்கை” – முதல்வர் விஜய்க்கு அனிருத் நன்றி

Priya
1998 Views
1 Min Read

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனிருத், “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களின் மூலம் உங்களுடன் பயணித்த இந்த நினைவுகூரத்தக்கப் பயணம் மிகவும் அற்புதமான, உணர்ச்சிகரமான ஒன்றாகும். என் மீது நீங்கள் வைத்த எல்லையற்ற நம்பிக்கைக்கும், நான் என்றும் பொக்கிஷமாகப் போற்றும் நினைவுகளுக்கும் நன்றி விஜய் சார். இசை என்றும் வாழும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

விஜய் உடனான பயணத்தில் ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள 5-வது திரைப்படம் ‘ஜனநாயகன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அனிருத்தின் பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இதில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவனையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply