யோகிபாபுவின் ‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

Priya
995 Views
1 Min Read

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் ஆகிவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’ திரைப்படம், தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply