உக்ரைனில் வணிக கப்பல் தாக்கப்பட்டு 4 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

Priya
18 Views
1 Min Read

உக்​ரைன் கடல்​ பகு​தி​யில் வணிக கப்​பல் தாக்கப்பட்டு 4 இந்தியர்கள் உயி​ரிழந்த விவ​காரத்​தில் ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்​டனத்​தைப் பதிவு செய்​துள்ளது.

‘எம்​.​வி.கோல்​டன் லியோ’ என்ற வணி​கக் கப்​பல் 5 இந்​தி​யர்​கள் உட்பட மொத்​தம் 17 மாலுமிகளு​டன் சோளம் ஏற்​றிக் கொண்டு உக்​ரைனின் ஒடேசா துறை​முகத்​தில் இருந்து புறப்​பட்​டது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ரஷ்யா நடத்திய ஏவு​கணைத் தாக்​குதலில் இந்தக் கப்​பலில் இருந்த 4 இந்திய மாலுமிகள் உட்பட 10 பேர் உயிரிழந்​த​தாக உக்​ரைன் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​த தகவலை உறுதி செய்​துள்ள இந்​திய அரசு, பலத்த காயமடைந்த மற்​றொரு இந்​திய மாலுமி தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​துள்​ளது. மேலும் இந்​திய வெளி​யுறவுத்​துறை, டெல்​லி​யில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் வரவழைத்து தனது பலத்த எதிர்ப்​பைப் பதிவு செய்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யுறவுத் துறை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “வணி​கக் கப்​பல்​கள் மற்​றும் அப்​பாவி மாலுமிகள் மீது நடத்​தப்​படும் இத்​தகைய தாக்​குதல்​கள் முற்​றி​லும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதவை. உக்​ரைனில் உள்ள நமது இந்​தி​யத் தூதரகம் நிலை​மையை உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கிறது. பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்ய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

சர்​வ​தேசக் கடல்​வழிப் போக்​கு​வரத்​துக்​கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தும் வகை​யில் வணி​கக் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வது கடும் கண்​டனத்​துக்குரியது” என கூறப்பட்டுள்ளது. உயி​ரிழந்​தவர்​களில் ஒரு​வர் கேரளாாவின் காசர்​கோடு மாவட்​டம் வெள்​ளரிக்​குண்​டு​வைச் சேர்ந்த அகில் ஜோயன் (26) என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளார்.

மெர்ச்​சன்ட் நேவி அதி​காரி​யான இவர், சமீபத்​தில்​ விடு​முறை​யில் ஊருக்கு வந்து நிச்​சய​தார்த்​தம் முடித்​து​விட்​டு, மீண்​டும் பணி​யில் இணைந்​துள்​ளார். இவரது மரணச் செய்​தியைக் கேட்ட குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply