போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஏஐடியுசி வலியுறுத்தல்

Priya
15 Views
1 Min Read

ஏஐடி​யுசி பொதுச் செய​லா​ளர் ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் வெளி​யிடப்​பட்ட வெள்ளை அறிக்​கை​யில், போக்​கு​வரத்து துறை​யின் மொத்த வரு​வாய் இழப்பு ரூ.72,667 கோடி எனவும், ஒரு கி.மீட்​டர் பேருந்து இயக்​கத்​துக்கு வரு​வாய் ரூ.25.97, செலவு ரூ.78.81, பற்​றாக்​குறை ரூ.52.84 எனவும் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கடந்த 8 ஆண்​டு​களாக பேருந்து கட்​ட​ணங்​களில் எந்த உயர்​வும் செய்​யப்​பட​வில்​லை. சமூக சேவை நோக்​கில் பேருந்து கட்டண நிலை பராமரிக்​கப்​பட்டு வரு​கிறது

அரசு போக்குவரத்துக் கழகங்​கள், முக்​கிய நகரங்​கள், மலைப் பகு​தி​கள், கடை கோடி கிராமங்​கள், புதிய குடி​யிருப்பு பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களில் லாப நோக்​கமின்றி பேருந்து சேவை​களை பொது​மக்​களுக்கு வழங்கி வரு​கின்​றன.

அரசு போக்​கு​வரத்து என்​பது மக்​களுக்கு சேவை​யாற்​றும் துறை ஆகும். எனவே, இதனை முழு​மை​யாக லாப-நஷ்ட கணக்​கின் அடிப்​படை​யில் மட்​டும் மதிப்​பிட முடி​யாது. இதனை ஒரு சமூக கடமை​யாக கருத வேண்​டும்.

மேலும், உரிய அனு​ம​தி​யின்றி சட்​ட​விரோத​மாக இயக்​கப்​படும் ஆம்​னி, மேக்சி கேப், உரிமம் மீறி இயங்​கும் மினி பேருந்​துகள் போன்ற வாக​னங்​களால் அரசு போக்குவரத்துக் கழகங்​களுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. அவை கடுமை​யாக கட்​டுப்​படுத்​தப்பட வேண்​டும்.

பணி​யாளர் பற்​றாக்​குறை காரண​மாக பேருந்​துகள் முழு​மை​யாக இயக்​கப் படவில்​லை. பேருந்து இயக்​கு​வதற்கு தேவை​யான ஓட்​டுனர், நடத்​துனர், தொழில்​நுட்​பம் மற்​றும் அலு​வல​கப் பணி​யாளர்​கள் காலி பணி​யிடங்​கள் நிரப்ப வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply