வருங்காலத்திலும் நாட்டை ஆளப் போவது பாஜகதான்: அடுத்த தேர்தல் வரை தவெக இருக்குமா என நயினார் ​கேள்வி

Priya
33 Views
1 Min Read

ஜன சங்​கத்​தின் நிறு​வனர் டாக்​டர் ஷ்யாமா பிர​சாத் முகர்​ஜி​யின் நினைவு நாளை​யொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் அவரது படத்​துக்கு மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று மலர் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​று​வதற்கு நீதிபதி உத்​தர​விட்​டும், தீபம் ஏற்​ற​முடி​யாது என அமைச்சர் நிர்மல்குமார் சொன்​னால், சட்​டப்​படி, அவர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் மட்​டும் அல்ல; அமைச்​ச​ராக இருப்​ப​தற்குக்கூட தகுதி இல்​லாதவர்.

மோடி, அமித் ஷா ஆகியோர், அவர்​களது உறவினர்​களைக் கூட ஆளுநர்​களாக நியமிக்​கலாம் என அவர் கூறி​யிருக்​கிறார். இது​போன்று எங்​கே​யா​வது நடந்​திருந்​தால் அவர் சொல்ல வேண்​டும். தவெகவை போல ‘ஏனோ தானோ’ கட்​சி​யோ, சாதாரண கட்​சியோ அல்ல பாஜக.

இன்று மட்​டும் அல்ல; இனி வருங்​காலங்​களில் எத்​தனை தேர்​தல் வந்​தா​லும் பாஜக தான் நாட்டை ஆளும். ஆனால், தவெக அடுத்த தேர்​தல் வரை இருக்​கு​மா? இல்​லை​யா? என்​பது தெரி​யாது.

இன்​ன​மும் சினி​மா​வில் நடிப்​பதை போலவே சட்​டப்​பேர​வை​யில் நடித்து கொண்​டிருக்​கிறார் முதல்​வர் விஜய். சட்​டப்​பேர​வை​யில் அவ்​வாறு சைகை காட்ட கூடாது என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். இது​போல முன்பு செய்​தவர்​களின் நிலை என்ன ஆனது என்​பதும் உங்​களுக்கு தெரி​யும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply